Monday, April 20, 2009

நண்பா.!!!

கடவுளிடம் வரங்கள் கேக்கும் பழக்கம்
எனக்கு இதுவரை இருந்தது இல்லை..!!!
கவிதைகள் நட்புக்காக எழுதிய

காலங்களும் இதுவரை வாய்த்தது இல்லை..!!!
கண்ணீர் துளிகளால் அலங்கரிக்கிறேன் என் கவிதைகளை..!!!
நட்பு என்னும் வார்த்தைக்கு
அர்த்தம் கொடுத்தவன் நீ என்பதால்..!!!

கவிதைக்கு கவிதை..!!!

உலக மொழிகளில் வார்த்தை தேடினேன்..!!!
உனக்காக ஒரு கவிதை எழுதலாம் என்று..!!!
அர்த்தங்கள் புரியாத மொழிகளில் வார்த்தை எதற்கு..!!??
உயிர்க்காக கவிதை எழுத வார்த்தைகள் எதற்கு..???
என் சுவாசமே நீதானே..!!!

உயிர்த்துடிப்பு..!!!

என் இதயம் சில சமயம் துடிக்கின்றது..!!!
சில சமயம் நின்றுவிடுகிறது....!!!
இரண்டுக்கும் நீயே தான் காரணம்..!!!
துடிக்கும்போது இருக்கிறாய்..!!!
நின்றுவிடும்போது சென்றுவிடுகிறாய்..!!!!

அம்மா..!!! தெய்வம்..!!!

உதிரங்களின் நடுவில் உதிர்த்தவள் நான்..!!!
உன் உதிரம் சிந்தி எனக்கு உருவம் கொடுத்தாய்..!!
நிச்சயம் உன் கடன் தீர்க்க முடியாது..!!
அப்படி கடன் தீர்க்க வழியும் இல்லை..!!!
அடுத்த பிறப்பில் என் குழந்தையாய் பிறப்பாயா அம்மா??
உன் கடன் தீர்க்க..???
நான் சுவாசிக்க கற்றுக்கொடுத்த உன் சுவடுகள் தேடுகிறேன்..!!!
நீயே தான் என் உயிர் அம்மா..!!!

மறக்க தெரியவில்லை..!!!

நான் உன்னை நினைப்பதே இல்லை..!!!
உன்னை மறந்தால்தானே நினைப்பதற்கு..!!!

இதயம்..!!!!

நீ வசிப்பது என் இதயம்
என்றால் சொல் நெஞ்சை
கிழித்து வாசல் அமைக்கிறேன்..!!!

நினைப்பு..!!!!

என்னை நினைப்பதை விட
உன்னை நினைப்பதில்தான்
அதிக நேரம் செலவு
செய்கிறேன்..!!!!!

Saturday, April 18, 2009

உன் நினைவு..!!!

உலர்ந்த ரோஜா இதழ்..!!!
தொலைத்த கைகுட்டை..!!!
மறைத்த காதல் கவிதை..!!!
எதுவும் உன் நினைவாய்..
என்னிடம் இல்லை..!!!
உன் நினைவை தவிர..!!!!

உன் பெயர்..!!!

என் தோழிகள் என்னை கை கொடுத்து பாராட்டினார்கள்..!!!
எனக்கு முன்பின் தெயாதவர்கள் கூட அருமை என்று
புகழாரம் சூடினார்கள்..!!!
வெற்றிக்கு மாலை சூடும் வகையில் பரிசுகள் கிடைக்கபெற்றேன்..!!!
அட கடவுளே..!!!
கவிதை போட்டி என்றார்கள் நான்
உன் பெயரைத்தானே எழுதி வைத்தேன்..!!!

வாழ்க்கை..!!! வாடகை..!!!

வாடகை வீட்டில் வாழ்ந்திட்ட நாங்கள்,
வாழ்வினில் அகதிகள் ஆனோம்..!!
தேடிய சொந்தம் எம்மிடம் இல்லை..!!!
தெருவினில் ஓடுது வாழ்க்கை..!!
வீட்டினில் உருப்படி ஏழு..!!!
இந்த விடிவினில் உருப்படி ஏது..!!
கூட்டில் கல்லை எறிந்தால்..!!
அங்கு குருவிகள் வாழ்ந்திடுமா..!!!????

Friday, April 17, 2009

மனசு வலிக்குது..!!!

கொஞ்சம் கூட வெக்கம் இல்லாதது என் மனது..!!
நீ என்னை நினைப்பதே இல்லை..!!!
என் மனம் உன்னையே நினைக்கிறது..!!!

நீ..!!!

நீயும் என் இதயத்துடிப்பும் ஒன்று..!!!
எனக்கு தெரியாமல்..,,
எனக்காக துடிக்கிறீர்கள்..!!!

வலி..!!!

மரணவலியின்
அர்த்தம்
புரிந்தது..!!!
உன்னை
பிரிந்த
நாள்
அன்று...!!!

Tuesday, April 14, 2009

பாரம்

ஒவ்வொரு நெஞ்சிலும்..!!
ஒவ்வொரு விதத்தில்..!!!
பாரங்கள் உண்டு..!!!
ஒன்று உறவால்..!!!
இன்னொன்று சொந்த உணர்வால்..!!!

டோரா பொம்மை..!!!

நிறம் மாறி.விட்டது..!!
துணி கிழிந்து விட்டது..!!!
தூக்கி போடலாம் என்று நினைத்த
டோராபொம்மையையை வேண்டாம் அம்மா..!!!
என்னோட டோரா என்று தடுத்தது குழந்தை..!!
பாசம் குழந்தைகளுக்கு மட்டும் தெரிந்தது..!!!
வேஷம் பெரியவர்கள் மட்டும் அறிந்தது..!!!

Sunday, April 12, 2009

மரணதண்டனை..!!!

அன்று பார்த்த படங்களின் ஆழம் இன்றும் தீரவில்லை என்னில்..!!!
ஈழ மண்ணில் பிறந்த குற்றத்திற்க்காக
இளையவர்கள் இறக்கிறார்கள் என்றால்.,
இன்று கருவில் இருக்கும் குழந்தையுமா?
குழந்தைகளை தெய்வங்கள் என்கிறார்கள்..!!!
ஓ...!!!
தெய்வங்களுக்கும் மரண தண்டனையோ..???
ஈழ மண்ணில் பிறக்க போவதற்காக..!!!

சுமை..!!! முடிவதில்லை..!!!

நெஞ்ச சுமைகளை கொட்டி தீர்த்து விடுவோம்..!!
சித்திரை மாதங்களில் புது வருடம் இல்லை..!!
புரட்டாதி மாதங்களில் தீபாவளி இல்லை..!!
மார்கழி மாதங்களில் ஜேசு பிறந்த நாள் இல்லை..!!
இன்னமும் மரண வலி..!! எங்கேயும் ரத்த வெள்ளம்..!!
எதிலும் யுத்த வெறி..!!
இன்னும் கொஞ்ச நாள்தான்..??
போர் முடிய அல்ல..!!
மிச்சம் இருக்கும் தமிழனும் அழிந்து விட..!!

எங்கள் தேசம்..!!!

கொட்டிடும் மழைத்துளி குரிதியைச் சிந்திடும்.!
செத்திடும் தமிழ் மக்கள் செய்த கோடி பாவமோ.!
மண்ணோடு மண்ணாகி மடிகிறார் எம் மக்கள்.!
அவர்களுக்காக கண்ணீர்த்துளியை தானமாக்கி விடாதீர்கள்,
அது கடமையாகிவிடும்..?
அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து விடாதீர்கள்,
அங்கு செத்தவர்களே போதும்.!
மனிதாபிமானம் மட்டும் இருந்தால் போரை நிறுத்துங்கள்..!
இல்லையேல் மடியட்டும் எங்கள் மக்கள்.!
வடு இல்லாமல் அழிந்து போகட்டும் எங்கள் இனம்.!
மகிழ்ச்சியான நாளென்று அறிவியுங்கள் அந்நாளை..!!

எப்பொழுது..!!???

ஈழம் என்ன பாவம் செய்ததோ..?
நான் பிறந்த காலம் தொட்டு பிரச்சனை..?
வெடிகுண்டுகளின் சத்தம் கேட்டு தூக்கம் செத்தது..
தொலைத்த சொந்தங்கள் பல பல...
அடுத்த தலைமுறையாவது...
சுவாசிக்கட்டும்..
சுகந்திர காற்றை...?
கேளுங்கள்... கடவுளே...?
எத்தனை ஜீவன்களின் பிராத்தனைகள்...
கொஞ்சம் செவி கொடுங்கள்...
நாங்களும் வாழ்ந்து பார்க்கிறோம்....?
எங்கள் தேசத்தில்....!!??

வேதனை

உடல் நொந்து..!!
உயிர் பிரிந்து..!!
ஏற்ப்பட்ட வலி..!!!
இந்த ஈழ மண் படும்,
வேதனையில் வாடிப்போகிறது..!!!
இதயம் துடிப்பதை மறந்தால் கூட
நல்லதுதான்..!!!
தமிழன் கலங்குவதை
இக்கண்கள் காணாமல் போகட்டும்..!!!

தமிழன்

விண்ணின் முழக்கங்கள் இல்லாமல்
வெடிகுண்டுகளின் அகோர சத்தம் கேக்க வேண்டுமா??
குழந்தைகளின் சிணுங்கல்கள் இல்லாமல்
குமரிகளின் அழுகுரல்கள் கேக்க வேண்டுமா?
தென்றலின் தேனிசை கேக்காமல்
தேசம் சாகும் கொடூரம் காண வேண்டுமா?
வாருங்கள் எங்கள் தேசத்திற்கு..??
எங்கள் தேசம் பெயர் தமிழ் ஈழம் என்கிறார்கள்..!!
தமிழன் இல்லாமல்..!!!

நகைப்பு..!!

நாட்கள் நீள நீள நாடும் குலைகிறது..!!!
நாளை விடியலுக்காக காத்திருந்த குழந்தைகள்,
கருவறையில் சிதைகிறது..!!!
எங்கள் தேசத்தில் வீசும் காற்றுக் கூட மெல்ல,
நகைத்துவிட்டு செல்கிறது..!!
தமிழா..!!
நீ என்னை சுவாசிக்க போவது..!!!
இன்னும் சில நாட்கள் என்று..!!!

அம்மா அழகான அர்த்தம்..!!!

அம்மா..!!
நான் முதல் முதல் உச்சரித்த வார்த்தை..!!
கடவுளின் மறுவுருவம்..!!
கருவறையில் கண தூரம் சுமந்தவள்..!!
கடவுளிடம் பிடிக்காதது இது மட்டும்தான்..??
உன்னை வருத்தி என்னை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறாரே..!!!
இந்த உலகத்தில் நீ வாழும் காலம் வரை
நானும் வாழ வேண்டும்..!!
உன்னை பிரிந்து வாழும் ஒரு நிமிடம் கூட
இந்த உலகத்தில் வேண்டாம்..!!!
உலக அதிசயங்களில் உந்தன் பெயர் இடம்பெறவில்லை..!!
கடவுளின் பெயர்கள் அந்த வரிசையில் இடம் பெற முடியாதே..!!
கவிதை என்று எதையெல்லாமோ எழுதி இருக்கிறேன்..!!
"அம்மா" என்னும் வார்த்தைக்கு இணையான
கவிதை எங்கு உண்டு??

முதல் கவிதை..!!!

முதல் கவிதை..!!
ஞாபகம் வரவில்லை..!!
அம்மாவை பற்றி இருக்குமோ??
அப்பாவை பற்றி இருக்குமோ??
ரோஜா மலர் பற்றி..?? இருக்காது..!!
எப்படி யோசித்தாலும் கிடைக்கபோவதில்லை
முதல் கவிதையின் முதல் வார்த்தை..!!!

உதிரம்..!!

சிறு உதிரம் கைகளை நனைத்தாலே
பதறிவிடுகிறோம்..!!
பற்றோடு இருக்கவேண்டிய வாழ்க்கை
பற்றற்று போய் விடுகிறது..!!
எம் மண்ணை நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் மெதுவாக உறுத்துகிறது..!!
நாங்கள் தப்பிவிட்டோம் எம் மக்கள் என்ன பாடோ என்று..!!!

ஈழம்

சில சமயங்களில் என்னை அறியாமல்
கண்கள் நீர் பெருக்கெடுக்கின்றது..
என் ஈழம் படும் பாடு எத்தனை நீர்த்துளிகள்
சேர்ந்தாலும் மாறாதே..!!!

நட்பு

கடல் தாண்டி மலருமாம் காதல்
அதில் எனக்கு நம்பிக்கை இல்லை..!!!
கண்கள் பார்க்காமல் தொடருமாம்

காதல் அதில் எனக்கு துளி கூட உடன்பாடில்லை..
எதையும் எதிர் பாராமல்,
எதற்கும் அஞ்சாமல்,
கிடைத்த இந்த நட்புக்கு..!!
இந்த உலகத்தில் ஈடு எது..!!!???