Wednesday, February 18, 2009

பிச்சைபாத்திரம்

பாடல் கேட்பவர்களை பாதித்ததால் கேட்பவரை கண்கலங்க வைத்தால் அப்பாடலின் அர்த்தம் புரிந்தால் அது நிச்சயமாகவெற்றி தான்.....
அப்படிப்பட்ட பாடல்தான் நான் கடவுள் படத்தில் இடம்பெறும் பிச்சை பாத்திரம் என்னும் பாடல்..... கேட்கலாம்.......

மனிதன்

மனிதன் அல்லல் படுகிறான்..? அவனை அல்லல் படுத்தியது யார்? வெளித் தோற்றத்திற்கு யாரோ அலைக்கழிப்பது போன்று தென்படுகிறது. உண்மையிலே ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அலைக்கழித்துக் கொள்கிறான்.
வெளித் தோற்றம் வேறு, உள்ளிருக்கும் உண்மை வேறு. ஒவ்வொரு மனிதனும் தான்படும் துயரத்துக்குத் தானே பொறுப்பாளி...!!

Saturday, February 14, 2009

செல்ல குட்டிக்கு...!

மின்மினிப் பூச்சிகளின் கண்சிமிட்டும் மாலை நேரம்...!
சத்தமில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் அன்று பிறந்த பூனைக்குட்டிகள்..!
பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் அந்தி சூரியன்..!
அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்காக வருந்திக் கொண்டிருக்கும் ஆலய பக்கதர்கள்..!
நாளை விடியலுக்காக காத்திருக்கும் நாட்டு ரோஜா மொட்டுக்கள்..!
இத்தனைக்கும் இடையில்" படிக்கவில்லை " என்று
அம்மா அடித்ததில் அழுதுகொண்டிருக்கும்
எனது சத்தம் மட்டும் உரக்க ஒலிக்கிறது...!
"எனது உலகத்தில்..!"

என் உலகம்

கடும் மழை பெய்து கலைத்திட்ட மேகம்
மெதுவாய் மழை தூறல் தூவ
வாசல் கதவுவரை வந்த நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தார்
அம்மம்மா..!
நேரம் ஆயிற்று எழுந்திரு பள்ளி செல்ல என்றார் அம்மா..!
கைபேசியை காலையிலே நோண்டாதே என்று கத்தித்தீர்த்தாள்
அத்தை..!
புத்தகசுமையை சுமந்துகொண்டு வெளியே வந்தபோது அடக்கிவைத்த கோபத்தை அடிச்சுத் தீர்த்தது மழை..!
அப்பாடா..!
இன்று பள்ளி விடுமுறை என்று பரவசப்பட்டது என் மனம்...
தொடங்கிற்று எங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில்
" டோராவின் பயணங்கள்..."

Wednesday, February 11, 2009

என் அப்பாவுக்காக நான் வார்த்தது..!!

அம்மாவின் அழுகை உரக்க ஒலித்து கொண்டிருந்தது.! அண்ணன்மார் வருகையால் எழுந்த சத்தம் வானத்தை கிழித்தது.!மரணவலி அறிந்திராத எங்கள் வீட்டு மழலைகள் திக்குமுக்காடினர்.!சந்தோஷத்தை மட்டுமே பார்த்திருந்த எனது விழிகள் நீரோடையாய் பாய்ந்தது.! சத்தம் போட்டு சிரிப்பலைகள் கேட்ட வீடு சாவு மேளங்களின் சத்தங்களால் முழங்கின.! சொந்தங்களால் வீட்டு வாசல் வரை நிரம்பி வழிந்தன.!
சாவு செய்தி கேட்டு வந்தார்களாம்..?
அட கடவுளே..!
எங்கள் வீட்டு முற்றத்தில்

எனது அப்பாவின் சடலம்..!
நெஞ்சில் நெருப்புடனும்..!
கண்களில் நீருடனும்..!
உதடுகளில் விம்பல்களுடனும்..!
அனுப்பிவைத்தோம் அப்பாவை..!
எங்கள் வீட்டு தெய்வத்தை...!!



Tuesday, February 10, 2009

என் அப்பாவுக்கு...








யாரேனும் உனக்கு
அப்பா இல்லையே..??
என்று கருணைமழை
பொழிந்தால் எனக்கு
கண்கள் கலங்குவதில்லை.!
பதிலுக்கு சிறிது
புன்னகை மற்றும்
பூத்துவிட்டு கூறிவிடுகிறேன்.!
எனது அப்பா மரணிக்கவில்லை..!?
பயணிக்கிறார் ......
எனது இதயத்தில் என்று....!!

Life

Some times life becomes too easy, sometime too tough.....