Saturday, March 28, 2009

அம்மா.!!!

அம்மா.!!
நான் சுவாசிக்க கற்றுகொடுத்தவள்..!!
எனக்கு சுவாசம் தந்தவள்..!!
பெண்மையை அலங்கரித்தவள்..!!
அன்புக்கு அடையாளம் தந்தவள்..!!
அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள்..!!
புரியாத உலகில் வாழ கற்றுக்கொடுத்தவள்..!!
உள்ளம் இனிக்கும் உறவுகளை என்னை சுற்றி படைத்தவள்...!!
உதிரத்தை ஒன்றாக்கி உருவம் கொடுத்தவள்..!!
இந்த உலகத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும்,
என் முதல் தெய்வம் நீ..!!
என் சுவாசமே நீதான் அம்மா..!!
என் கண்களை நீர்த்துளிகள் மறைக்கும் முன் என் கவிதையே நிறுத்திவிடுகிறேன்..!!

Saturday, March 7, 2009

என்ன செய்யலாம் ??

செந்தழல் வேர்க்கை செத்திடும் பூமி..! சொந்தங்கள் இல்லை வாடுது பாதி..! வெண்மணல் எங்கும் குருதியின் வாசம்..! வேதனையில் வாடுவது எங்கள் தமிழ் தேசம்..! கருவறையின் வாசம் தாண்டிவந்ததொரு மழலை..! கயவன் அவன் போட்ட குண்டில் கண்டது மயானக்காடை..! தூக்கம் கெட்டுவிட்டாலே துடிக்கும் நம்மிடையில், தூங்கியவர்கள் எழும்பவே இல்லையே..? என்ன செய்யலாம்...?

Thursday, March 5, 2009

மரணம்

பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம் , இறந்தவன் பிறப்பது உறுதி.. பரிகாரம் காண முடியாத இந்த விஷயத்தில் நீ கவலைப்படுவது பொருந்தாது...
ஆரம்பமும் முடிவும் தென்படாத ஒரு மாயத்தோற்றம் இந்த வாழ்க்கை..!!
கீதாச்சாரம்...

Tuesday, March 3, 2009

வாழ்க்கை துன்பம் இன்பம்

வாழ்க்கை என்பது துன்பமும் இன்பமும் நிறைந்தது தான் ஆனால் துன்பம் இல்லாவிட்டால் இன்பத்தின் பெருமையை உணர முடியுமா..? அது மட்டுமல்ல சதா காலமும் ஒருவரால் இன்பமாய் வாழ்ந்து விட முடியுமா என்ன..? அதுபோல் என்றென்றும் ஒருவர் துன்பத்திலே துவளவும் முடியாது.. நமது ஒவ்வொரு செயலும் பின்விளைவு ஒன்றை கொடுக்கிறது.. அதற்கு ஏற்ப நமக்கு சூழ்நிலை வந்து வாய்க்கிறது.. துன்பங்கள் வந்தே தீரும் ஆனால் நிலைப்பதில்லை.. அன்னை ஸ்ரீசாரதாதேவி..

கீதையின் வாக்கு...

எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும். வேலையின்றி ஒருவர் ஒருபோதும் இருக்கலாகாது. ஏனெனில் சோம்பி இருக்கும்போது எல்லாவிதமான தீய எண்ணங்களும் மனதில் தோன்றும்.. எனவே தொடர்ந்து வேலையில் ஈடுபடுவதால், மனதில் தீய எண்ணங்கள் சேர்வது தடுக்கப்படுகிறது..!! என்று சொல்கிறது கீதாச்சாரம்..!!

கீதை

யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன்.. அர்ஜுனா..!! மனிதர்கள் என்னுடைய வழியையே எப்போதும் பின்பற்றுகிறார்கள்..!! கீதை

வாழ்க்கையின் பாதை

தன்னை அழுத்தத் துடிக்கின்ற சூழ்நிலைகளில் ஓர் உயிர் தன்னை வெளிப்படுத்தவும் நிறைநிலையை அடையவும் முயல்வதே வாழ்க்கை..
சுவாமி விவேகானந்தா

Monday, March 2, 2009

சொர்க்கம் நரகம்

நீதிமன்றம் எப்படி இருக்கும் என்பது நீதிமன்றத்திற்கு போகும்வரை தெரியாது..?அங்கே போய் பார்த்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்..!! அதே போல்தான் சொர்க்கம் நரகம் என்பதும்.. சடலத்தை தூக்கி செல்லும் போது .. "புண்ணியவான் போய்விட்டாரே..??"என்று பத்து பேர் சொன்னால் அந்த வார்த்தைகளே சொர்க்கத்தின் படிக்கட்டுகள்..!! "சண்டாளன் போய்விட்டன் "... என்றால் நரகத்தின் படிக்கட்டுகள்..!! மறுபிறவி என்பது நிச்சியம் உண்டு. ஒருவன் இறந்த பின்பு எவ்வளவு காலம் கழித்து மறுபிறப்பு எடுக்கிறான் என்பது அவனது ஆசை கருமத்தை பொறுத்தது..!! கவிஞர் கண்ணதாசன்